Wednesday, December 26, 2012

தொடக்கம்-ஒரு முடிவில்லா அடர்த்தியின் மையம்

இது என்னுடைய பதிவு.!

என் மனம்!

 நீங்கள் இங்கே அதிக தொலைவு சென்றால் எனது எண்ணங்கள் உங்களை சிறை படுத்திவிடும. என்னென்றால் இங்கே ஆட்சி புரிவது எனது சிந்தனைகள்!
நான் என்ன நினைகிறேன்!
நான் என்ன உணருகிறேன்!
நான் என்ன பார்க்கிறேன்!

குறைந்தபட்சம் ஓவ்வொரு நாளும் நான் இங்கே எதையாவது கொண்டுவந்து சேர்க்கிறேன்.

நீங்கள் இங்கே தங்கும் காலம் அதிகமாக அதிகமாக உங்களை ஒரு இருள் சூழ்வதை உணருவீர்கள்.உங்களை சுற்றியுள்ள பிடியின் இறுக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கும். சில சமயங்களில் இந்த பிடி சற்று தளரலாம்...தளராமலும் போகலாம்! இங்கே இருந்து அதிர்ஷ்டத்துடன் தப்பி வெளியேருவீர்களா?அல்லாது இந்த சூழலுக்குள் மயங்கி அடைபடுவீர்களா?

நான் இங்கே எனது சூன்யமான மனதில் தோன்றும் சிந்தனைகளின் பார்வைகளை பகிரிந்துகொள்ளப்போகிறேன். அவைகள் முற்றிலும் முட்டாள்தனமாக இருக்கலாம்,அல்லது நான் உங்களை இங்கே சிறை படுத்தியுள்ள இந்த முட்டாள்தனமான சூன்யத்தில் இருந்த உங்களை விடுவித்துக்கொள்ள உதவலாம்!

உங்கள் அதிர்ஷ்டத்தின் உதவியுடன் அப்படியொன்றை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா? அப்படி முடிந்தால் அது உங்களுக்கு உதவக்கூடியதாக இருக்குமா?? அல்லது அது உங்களை நான் உறையும் இன்னமும் ஆழமான இருளுள் உங்களை அமிழ்த்தி விடுமா?

1 comment:

  1. அட! வலைப்பூவை தொடங்கி விட்டு யாரிடமும் சொல்லாமல் ரகசியமாய் வைத்திருக்கிறீர்களே?! வாழ்த்துக்கள் நண்பரே!!! :)

    ReplyDelete